எர்துரு வரலாற்றுத் தொடர் சீசன

Derilis Ertugrul என்ற வெப் சீரீஸ் , நம் சகோதரர்ளுக்கு புரிய வேண்டும் என்றால் இங்கு நம் திப்பு சுல்தானை போல துருக்கியில் #Ertugrul வரலாறு. 1225ல் நடந்த இஸ்லாமியர்களுக்கும் CHRISTIAN KNIGHT TEMPLARS க்கும் நடந்த போரினை மையமாகக்கொண்டது , அதில் எப்படி வெற்றிக்கொண்டார்கள் என்பதே கதையாம்சம்.

வெறும் போரினை மட்டும் காட்டியிருந்தால் இந்த பதிவே அவசியமற்றது. ஆனால் நடந்ததோ பண்டைய கால இஸ்லாமிய நாகரிகம் , தற்சார்பு பொருளாதார ஈட்டல் , அன்பு , பெண்களிடம் உள்ள மரியாதை , அரசரின் கவுரவம் காத்தல் போன்ற என்னற்ற விடயங்கள் பிரம்மிக்க வைக்கிறது ,

அதிலும் தனது கூட்டத்திற்கு ஒரு ஆபத்து என்றதும் பக்கத்து பெரிய நில மன்னரிடம் உதவி கேட்க சூழல் நேரிடும் , அப்பொழுது தங்களது சுய கவுரவத்தையும் விடாமல் , மானத்தையும் அடகு வைக்காமல் இரு மன்னர்களுக்கும் நடக்கும் பேச்சுவார்த்தை உண்மையிலயே மெய்சிலிர்த்துதான் போனேன் நமது முன்னோர்களை நினைத்து , ஒவ்வொறு செயலுக்கும்முன் இறைவனை முன்நிறுத்தி ஸலவாத் ஓதி தொழுது தங்களது ஈமானின் பலத்தையும் வாளுடன் சேர்த்தே காட்டி பிரம்மிக்க வைக்கிறார்கள் , இன்று நமக்கு வயிற்று வலி வந்தால்கூட தொழுகையை விடும சூழல் உள்ளது என்பதே நிதர்சன உண்மை ....

ஒவ்வொறு கஷ்டமான இக்கட்டான நேரத்திலும் , நபிமார்களின் கஷ்டங்களை வரலாறாக கூறி , சஹாபாக்களின் கஷ்டத்தை வரலாறாக கூறி , தாபிஈன்களின் கஷ்டத்தை வரலாறாக கூறி நம் படும் கஷ்மெல்லாம் ஒன்றுமில்லை என நகரும் போது மனதை பிழிந்து எடுக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை , ஆனால் இன்றோ ஸஹாபாக்கள் என்ன அவ்ளோ பெரிய சாதனையாளர்களா என எள்ளி நகையாடும் கயவர்கள் மத்தியில் நாமும் பயணிக்கிறோம் என்பது வேதனையிலும் வேதனை ...

மொத்தத்தில் இந்த வெப் சீரீஸ் இஸ்லாமியர்களின் உண்மையான வரலாற்றினை நம் கண் முன்னே நிறுத்துகிறது என்பதில் மாற்று கருத்தில்லை , டிக்டாக் , வாட்ஸ்ஆப் என பொழுதை கழிக்க நினைக்கும் நபர்கள் இந்த வரலாற்றினை பார்த்து நமது வரலாற்றினை அறிந்துகொள்ளலாமே என்ற சிறு நோக்கமே இப்பதிவு ..



கருத்துகள்